ஜாக்டோ-ஜியோ போராட்டம்- 1,843 பேர் கைது
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சிவகங்கையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 967 பெண்கள் உள்பட 1,843 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் கால வரையரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, உயர்கல்வித் துறை, நகர் நிர்வாகத் துறை, அங்கன் வாடி, சத்துணவு ஊழியர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி நேற்றும் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தலை நகரங்களில் நடைபெற்றது.
சிவகங்கையில் மாவட்ட அளவிலான போராட்டம் நடைபெற்றது. இதில் செல்வக்குமார், முத்துச்சாமி, ஜோசப்சேவியர், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முத்துபாண்டியன், நாகேந்திரன், முத்துராமன், சங்கர், இளங்கோவன், செல்வம் மற்றும் 967 பெண்கள் உள்பட 1,843 பேரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story