வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Jan 2019 3:39 AM IST (Updated: 26 Jan 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

காரைக்கால்,

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 9-வது தேசிய வாக்காளர் தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வாக்காளர் பதிவு அதிகாரி ரேவதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் அம்பேத்கர் வீதி, மாதா கோவில் வீதி, திருநள்ளாறு வீதி, பாரதியார் சாலை வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலத்தை அடைந்தது. ஊர்வலத்தில், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, தேர்தல் துறை கண்காணிப்பாளர் புஷ்பநாதன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

காரைக்காலை அடுத்த தாமனாங்குடி தூய மரியன்னை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை திருநள்ளாறு தாசில்தார் முத்து தொடங்கிவைத்தார். பயிற்சி நிறுவன முதல்வர் செந்தில்வேல், தனியார் ஆங்கில நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஹிலா உம்மாள் ஆகியோர் வாக்காளர்களின் கடமைகள் குறித்து பேசினர்.

முன்னதாக, ஆசிரியர் காளிராஜன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் நவீன் மற்றும் தேர்தல் கல்விக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். முடிவில் தேர்தல் கல்விக்குழு அதிகாரி இந்திரா நன்றி கூறினார்.

Next Story