மாநிலம் முழுவதும் ‘தாக்கரே' திரைப்படம் வெளியானது சிவசேனா தொண்டர்கள் உற்சாகம்


மாநிலம் முழுவதும் ‘தாக்கரே திரைப்படம் வெளியானது சிவசேனா தொண்டர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 26 Jan 2019 5:15 AM IST (Updated: 26 Jan 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் ‘தாக்கரே' திரைப்படம் நேற்று வெளியானது. படம் வெளியான தியேட்டர்கள் முன்பு சிவசேனா தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

மும்பை, 

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் ‘தாக்கரே' திரைப்படம் நேற்று வெளியானது. படம் வெளியான தியேட்டர்கள் முன்பு சிவசேனா தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

‘தாக்கரே’ படம்

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் வாழ்க்கை சினிமாவாக தயாரானது. இந்த திரைப்படத்தை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. தயாரித்து உள்ளார். அபிஜித் பன்சே இயக்கத்தில் நவாசுதீன் சித்திக் பால்தாக்கரே வேடத்தில் நடித்துள்ளார். மராத்தி மற்றும் இந்தியில் உருவான இந்த படம் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று வெளியானது.

இதையொட்டி தியேட்டர்களில் சிவசேனா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர்.

கொண்டாட்டம்

‘தாக்கரே’ பட வெளியீட்டை மாநிலம் முழுவதும் படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மேளதாளங்கள் இசைத்தும், பட்டாசுகள் வெடித்தும் சிவசேனா தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

தாக்கரே பட வெளியீட்டை நவநிர்மாண் சேனா கட்சியினரும் கொண்டாடினார்கள். தானேயில் அவர்கள் பால் தாக்கரேயின் உருவப்படத்துக்கு பாலாபிஷேகம் செய்தனர். மும்பை மற்றும் தானேயில் ‘தாக்கரே' படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் நிரம்பி வழிந்தன. வாஷியில் உள்ள ஒரு தியேட்டரில் ‘தாக்கரே' பட போஸ்டர்கள் எதுவும் ஒட்டி வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அங்கு குவிந்திருந்த சிவசேனா தொண்டர்கள் போஸ்டர் இல்லாததை கண்டு ஆத்திரம் அடைந்தனர். திடீரென தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story