திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 26 Jan 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து, தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து, தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறுமி கர்ப்பம்

நவிமும்பை துர்பேயை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, கடந்த 2016-ம் ஆண்டு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. பெற்றோர் அவளை அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காண்பித்தனர்.

டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவளிடம் விசாரித்தபோது, அந்த பகுதியை சேர்ந்த கிஷோர் பிடே (வயது23) என்ற வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்ததாக கூறினாள்.

10 ஆண்டு ஜெயில்

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கிஷோர் பிடே மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அவரை கைது செய்து, தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மரபணு பரிசோதனையில் சிறுமியை கர்ப்பமாக்கியது, அவர் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அப்போது, குற்றவாளி கிஷோர் பிடேவுக்கு நீதிபதி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story