பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்
பவானிசாகர் அருகே பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர்,
பவானிசாகர் அருகே உள்ள கிராமம் தொட்டம்பாளையம். இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் பல பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவ- மாணவிகள் பாடங்களை படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதேபோல் தொட்டம்பாளையம் அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளும் பாடங்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தொட்டம்பாளையம் பள்ளிக்கூடத்துக்கு மாணவ- மாணவிகள் பலர் வந்து உள்ளனர். ஆனால் நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் பவானிசாகர்- பண்ணாரி ரோட்டில் உள்ள தொட்டம்பாளையம் ஆற்றுப்பாலம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் பெற்றோர்கள் கூறுகையில், ‘பள்ளிக்கூடத்துக்கு உடனடியாக ஆசிரியர்களை வரவழைத்து பாடம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். அவர்களிடம் போலீசார் ‘தற்காலிக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பாடம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என உறுதி அளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story