திருக்கனூர் அருகே மதுக்கடை மீது வெடிகுண்டு வீசிய ரவுடி கைது கூட்டாளிகள் 2 பேருக்கு வலைவீச்சு
திருக்கனூர் அருகே மதுக்கடை மீது வெடிகுண்டு வீசிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கனூர்,
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் உள்ள தனியார் மதுக்கடை மீது கடந்த 23-ந் தேதி இரவு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. கடையின் ஷட்டர் கதவில் விழுந்த வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஷட்டர் கதவு சேதமடைந்தது.
இது தொடர்பாக திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு வீசிய மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் வாதானூர் ஏரிக்கரையில் உள்ள பிள்ளையார் கோவிலில் படுத்து இருந்த கொத்தபுரிநத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்ற வெட்டு கார்த்தி (வயது 24) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது வெட்டு கார்த்தியும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மதுக்கடை மீது வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.
கூனிச்சம்பட்டு மதுக்கடையில் மேலாளராக பணியாற்றும் ஆனந்த், கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடையில் வசூலான ரூ.2 லட்சத்துடன் மதுரப்பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வெட்டு கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் சகடப்பட்டு சிவராமன், பி.எஸ்.பாளையம் மகி என்ற மகேந்திரன் ஆகியோர் சேர்ந்து ஆனந்தை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. இதில் சாட்சி சொல்லாமல் இருக்க ஆனந்தை மிரட்டுவதற்காக அவர்கள் வெடிகுண்டுகள் வீசியுள்ளனர். இதையடுத்து வெட்டு கார்த்தி கைது செய்யப்பட்டார்.
ரவுடியான இவர் மீது தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள சிவராமன், மகேந்திரன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story