சென்னையில் கட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா


சென்னையில் கட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா
x
தினத்தந்தி 27 Jan 2019 3:45 AM IST (Updated: 27 Jan 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த குடியரசு தின விழாவில், கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கட்சியின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சென்னை அசோக்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா நடந்தது. கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தேசிய கொடி ஏற்றினார்.

சமத்துவ மக்கள் கழக நிறுவனர்-தலைவர் ஏ.நாராயணன் திருவொற்றியூர் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இவை உள்பட அனைத்து அரசியல் கட்சி அலுவலகங்களிலும் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

Next Story