குடியரசு தினவிழா கொண்டாட்டம் 114 போலீசாருக்கு முதல்–அமைச்சர் பதக்கம் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்


குடியரசு தினவிழா கொண்டாட்டம்  114 போலீசாருக்கு முதல்–அமைச்சர் பதக்கம் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:30 AM IST (Updated: 27 Jan 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்ர்ல் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய 114 போர்சாருக்கு கலெக்டர் சிவஞானம் முதல்–அமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்ர்ல் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலெக்டர் சிவஞானம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். போர்ஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 90 பயணாளிகளுக்கு ரூ.9¾ லட்சம் மதிப்ர்லான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட தனிப்ர்ரிவு ஏட்டு கண்ணன் உள்பட 114 போர்சாருக்கு முதல்–அமைச்சர் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். 70 போர்சாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. 102 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக விழாவுக்கு வந்த கலெக்டர் சிவஞானத்தை மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், போர்ஸ் சூப்ர்ரண்டு ராஜராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி பரிமளா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நீதித்துறை அதிகாரிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவு தூணில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் குடியரசு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தாசில்தார் பரமானந்தராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் அமிர்தா பவுண்டே‌ஷன் உமையலிங்கம், சர்வேயர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கமி‌ஷனர் அசோக்குமார் தேசியகொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் என்ஜினீயர் சீனிவாசன், மேலாளர் பட்டுசாமி, சுகாதார அலுவலர் ராஜாராம், முன்னாள் வருவாய் ஆய்வாளர் சாகுல்அமீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் உதவி என்ஜினீயர் முத்து நன்றி கூறினார்.

இதே போல் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், என்ஜினீயர் நாராயணசாமி, ஒப்பந்தக்காரர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். கிங்மேக்கர் சமூக நல இயக்கம் மற்றும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி சார்ர்ல் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதை முன்னாள் நகர்மன்ற தலைவர் சபையர் ஞானசேகரன் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் அய்யனார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் இருந்து ரத்தம் பெற்றனர்.

விளாம்பட்டி பெரிய கருப்பண்ணன் நாடார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் கதிரவன் தேசியகொடியை ஏற்றி வைத்து பேசினார். இதே போல் சிவகாசி சபையர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தாளாளர் ஞானசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஆனையூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ர்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் மருத்துவ அதிகாரி வைரக்குமார், மருத்துவ அலுவலர் ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செய்திருந்தார்.

பள்ளப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணன் கலந்து கொண்டு பேசினார். ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் லட்சுமணப் பெருமாள் சாமி செய்திருந்தார். சித்துராஜபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து செயலர் சீனிவாசனும், செங்கமலநாச்சியார்புரத்தில் கனகமுத்தும், அனுப்பன்குளத்தில் செல்வராஜும், நாராணாபுரத்தில் சுந்தரராஜனும், விஸ்வநத்தத்தில் செல்வமும், தேவர்குளத்தில் ஆறுமுகச்சாமியும், சாமிநத்தத்தில் செந்தில்வேல்பாண்டியும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

திருச்சுழி அருகே கல்லூரணி நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைபள்ளியில் உறவின்முறை தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ராஜமாணிக்கம் தேசியக் கொடியேற்றினார், திருச்சுழி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் தேசிய கொடி ஏற்றினார். சப்–இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், ரவி, சி.ஜ.டி.சரவணன், தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர், ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டர் விஜயன் கொடியேற்றினார், பரளச்சி மேலையூரில் சப்–இன்ஸ்பெக்டர் பெருமாள் கொடியேற்றினார் சப்–இன்ஸ்பெக்டர் கண்ணன், சி.ஜ.டி குருசாமி கலந்துகொண்டனர்.

திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் பொறுப்பு அலுவலர் மணிமுத்து கொடியேற்றினார். சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாத்திமா பேகம் கொடியேற்றினார் மடத்துப் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊர் ர்ரமுகர் முத்துராஜா தேசிய கொடி ஏற்றினார். சல்வாஸ்புரம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் கொடியேற்றினார். நரிக்குடியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிடப் பள்ளியில் ஒடம் தொண்டு நிறுவன செயலர் வசந்தா கொடியேற்றினார்.

திருச்சுழி நல்நூலகத்தில் நூலகர் பாஸ்கரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும் வாசகர் வட்டம் சார்ர்ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு நூலக ஒருங்கிணைப்பாளர் சுந்தர். அழகேசன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள சொரிமுத்து நன்கொடையாக வழங்கினார். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், சிவராமன், பஞ்சாயத்து அலுவலக ஊழியர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் குடியரசு தினவிழா கொடியேற்று விழா முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக நடை பெற்றது. ஆலங்குளம் சிமெண்ட்ஸ் ஆலை துணை பொது மேலாளர் மாரிகண்ணு கொடியேற்றி வைத்தார். வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொக்கம்மாள், முத்துமாணிக்கம் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். ஆலங்குளம் அருகே உள்ள திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் பொன்னழகன் கொடியேற்றி வைத்தார். வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜ்குமார் கொடியேற்றி வைத்தார்.


Next Story