தூத்துக்குடியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
தூத்துக்குடியில் 70-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் 70-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி பிரையண்ட் நகர் 43-வது மற்றும் 47-வது வார்டு பகுதியில் மாநகர துணை தலைவர் மார்க்ஸ் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
த.மா.கா.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவில், மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் கலந்து தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஐ.என். டி.யு.சி. சார்பில் தமிழ்நாடு செயல் தலைவர் கதிர்வேல் தலைமையில் தூத்துக்குடி துறைமுக சபை அலுவலகத்திலும், துறைமுக சபை பதிவு கூட்டத்திலும், துறைமுக சபை ஐ.என். டி.யு.சி. அலுவலகத்திலும் இந்திய உணவு கழகத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஐ.என்.டி.யு.சி. துறைமுக சபை தொழிற்சங்க தலைவர் சந்திரசேகர், ராஜகோபாலன், பால்ராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கல்வி நிறுவனம்
தூத்துக்குடி ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் தூத்துக்குடி ராஜலட்சுமி கல்வியியல் கல்லூரி, ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அறிஞர் அண்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் தேசிய கொடியை ஏற்றினார். கல்வி நிறுவன செயலாளர் ஆறுமுக கிருஷ்ணகுமார், அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சக்தி வித்யாலயா
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் ஜெயா சண்முகம் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் ரூபிரத்ன பாக்கியம் செய்து இருந்தார்.
Related Tags :
Next Story