நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி- சங்கரன்கோவில்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தென்காசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காசிவிசுவநாதர் கோவில் முன்பு இருந்து தொடங்கிய பேரணியை உதவி கலெக்டர் சவுந்தர ராஜன் தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. பேரணியில் செஞ்சிலுவை சங்க செயலாளர் சுப்பிரமணியன், குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவிகள், செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாஸ் பாராமெடிக்கல் கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் தாசில்தார் தேர்தல் பிரிவு அலுவலகம் சார்பில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துணை தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, திருவேங்கடம் சாலை, பிரதான சாலை வழியாக பழைய நகரசபை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சங்கரன்கோவில் ரோட்டரி சங்க தலைவர் பிரேம்குமார், சாரதிராம் அறக்கட்டளை தலைவர் ராமநாதன், இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் உமாபழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்
ஆலங்குளத்தில் நடந்த பேரணியை தாசில்தார் பிரபாகர் அருண்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் விஜயன், கீழப்பாவூர் வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டினா ஜெபராணி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் உதவி தலைமை ஆசிரியர் அழகு லிங்கம், கிராம உதவியாளர்கள் சக்திவேல், சங்கரசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story