கழுகுமலை அருகே மளிகை கடைக்காரர் வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு மூதாட்டியை ஏமாற்றி மர்மநபர் கைவரிசை


கழுகுமலை அருகே மளிகை கடைக்காரர் வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு மூதாட்டியை ஏமாற்றி மர்மநபர் கைவரிசை
x
தினத்தந்தி 27 Jan 2019 2:45 AM IST (Updated: 27 Jan 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே மளிகை கடைக்காரர் வீடு புகுந்து மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கழுகுமலை, 

கழுகுமலை அருகே மளிகை கடைக்காரர் வீடு புகுந்து மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மளிகை கடைக்காரர்

கழுகுமலை அருகே கே.குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 56). இவர் கழுகுமலையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். இவருடைய மனைவி, தோட்டத்துக்கு சென்று விட்டார். எனவே வீட்டில் பெருமாள்சாமியின் தாயார் லட்சுமி அம்மாள் (80) மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது மதியம் வீட்டுக்கு வந்த மர்மநபர், பெருமாள்சாமியின் உறவினர் என்று கூறி, லட்சுமி அம்மாளிடம் தண்ணீர் கேட்டார். உடனே அந்த நபரை வீட்டில் அமர வைத்து விட்டு, தண்ணீர் எடுப்பதற்காக லட்சுமி அம்மாள் வீட்டுக்குள் சென்றார்.

4 பவுன் நகை திருட்டு

அப்போது வீட்டில் அலமாரியில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் திருடிச் சென்றார். சிறிதுநேரத்தில் தண்ணீர் எடுத்து வந்த லட்சுமி அம்மாள், அந்த நபரை காணாததால் வீட்டுக்கு வெளியே சென்று தேடிப்பார்்த்தார். ஆனால் மர்ம நபரை காணவில்லை. பின்னர் லட்சுமி அம்மாள் வீட்டுக்குள் சென்று படுத்திருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்த பெருமாள்சாமி, அலமாரியில் இருந்த நகை திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தாயாரிடம் விசாரித்தபோது, மர்மநபர் நகையை திருடி சென்ற விவரம் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை ஏமாற்றி, வீடு புகுந்து நகை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story