பெங்களூரு நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே 6 பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில் முதல்-மந்திரி குமாரசாமி நாளை தொடங்கி வைக்கிறார்


பெங்களூரு நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே 6 பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில் முதல்-மந்திரி குமாரசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:30 AM IST (Updated: 27 Jan 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயிலை முதல்-மந்திரி குமாரசாமி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு, 

பெங்களூரு நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயிலை முதல்-மந்திரி குமாரசாமி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

3 பெட்டிகளை இணைக்க கோரிக்கை

பெங்களூருவில் மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகசந்திராவில் இருந்து எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரை 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் நாகசந்திராவில் இருந்து எலச்சனஹள்ளி வரை 3 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நாகசந்திரா-எலச்சனஹள்ளி வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் அதிகஅளவு பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

நாளை முதல் இயக்கப்படுகிறது

இதையடுத்து, நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயிலை இயக்குவது தொடர்பாக கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஏனெனில் அந்த வழித்தடம் 24 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக இருப்பதால் சோதனை ஓட்டம் நடத்தப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையிலான வழித்தடத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் நாளை(திங்கட்கிழமை) முதல் ஓடத்தொடங்கும். நாளை சம்பிகேஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் சேவையை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக காலை மற்றும் மாலை நேரத்தில் அந்த வழித்தடத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

Next Story