திருச்சியில் குடியரசு தினவிழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரூ.1½ கோடிக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
திருச்சியில் குடியரசு தினவிழாவையொட்டி, தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.1½ கோடிக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று மாநகர ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஊர்க்காவல்படை ஆண்கள், பெண்கள் பிரிவு, தேசிய மாணவர் படை பிரிவினரும் அணிவகுப்பு நடத்தினர்.
இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் 93 பேருக்கு கலெக்டர் ராஜாமணி சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் தியாகிகளுக்கு நினைவுப்பரிசாக ‘பிளாஸ்க்’ வழங்கப்பட்டது. திருச்சி மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள், முதல் நிலைக்காவலர்கள், எழுத்தர்கள் என 82 பேருக்கும், மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த 38 பேருக்கும் என மொத்தம் 120 பேருக்கு தமிழ்நாடு முதல்–அமைச்சரின் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போரில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமும், வருவாய்த்துறை சார்பில் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.
முதல்–அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் மற்றும் முதியோர் உதவித்தொகை 4 பேருக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் 9 பேருக்கு பண்ணை கருவிகள், 3 பேருக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 49 லட்சத்து 28 ஆயிரத்து 759 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் 9 பேருக்கு 25 ஆண்டுகள் மாசற்ற பணியினை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஜோசப் அனினியோ அந்தோணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம் என அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 92 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். முன்னதாக குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் ராஜாமணி, திருச்சி காந்திமார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜன், திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, திருச்சி உதவி கலெக்டர் அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டரின் மனைவி பிரேமலதா ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழா நிறைவாக பள்ளி மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.

Related Tags :
Next Story