அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் நிச்சயம் கிடைக்கும் டி.டி.வி.தினகரன் பேச்சு


அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் நிச்சயம் கிடைக்கும் டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 27 Jan 2019 4:15 AM IST (Updated: 27 Jan 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு சிறுதையூர் ரவுண்டானாவில் கட்சி நிர்வாகிள் வரவேற்பு அளித்தனர்.

லால்குடி,

லால்குடி வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு சிறுதையூர் ரவுண்டானாவில் கட்சி நிர்வாகிள் வரவேற்பு அளித்தனர். லால்குடி ஒன்றிய செயலாளர் விஜயமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் தர்மதுரை, நகர செயலாளர் காத்தான், ஒன்றிய துணை செயலாளர் குகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தினகரன் பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த மக்கள் விரோத, துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களால் வழி நடத்தப்படுகின்ற இயக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். எப்போது தேர்தல் வந்தாலும், இந்த ஆட்சி முடிவுக்கு வரும். குறிப்பாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கயிருக்கிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு, 20 தொகுதிகளின் சட்டமன்ற இடைத் தேர்தலும் வர இருக்கிறது. அதில் இந்த ஆட்சிக்கு நீங்கள் முடிவு கட்டுங்கள். இந்த ஆட்சி மக்கள் விரோத, துரோக ஆட்சி என்பது தமிழகம் மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே அறிந்து வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சி என்றால் அது தமிழக மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக இருந்த ஆட்சி. அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் நிச்சயம் கிடைத்துவிடும், என்றார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ராமு, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கணேஷ்பாபு, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஜின்னா ஜாகிர் உசேன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் தர்மராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story