குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
புதுச்சேரியில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கட்சிக்கொடியேற்றினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து சேவாதள தொண்டர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், நிர்வாகிகள் நீல.கங்காதரன், தேவதாஸ், ஏ.கே.டி.ஆறுமுகம், வீரமுத்து, சாம்ராஜ், ரமேஷ், சிபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கட்சியின் நிறுவன தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசத்தலைவர்களின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் வாரிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கோர்ட்டு வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தலைமை நீதிபதி தனபால் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் இனிப்புகளை வழங்கினார். விழாவில் நீதிபதிகள், வக்கீல்கள் சங்கத்தினர், நீதித்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் பல்கலைக்கழக ஆய்வியல், கல்வியியல் மற்றும் கிராமப்புற புனரமைப்புத்துறை இயக்குனர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலாசாரத்துறை இயக்குனர் ராஜீவ் ஜெயின், தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் சித்ரா, துணை பதிவாளர் முரளிதாசன், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜிப்மரில் நடந்த விழாவில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியின்போது தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. தாகூர் கலைக்கல்லூரியில் நடந்த விழாவில் பொறுப்பு முதல்வர் தருமு தேசியக்கொடியேற்றி வைத்து தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Related Tags :
Next Story