சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.615 குறைவு


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.615 குறைவு
x
தினத்தந்தி 27 Jan 2019 10:15 PM GMT (Updated: 27 Jan 2019 4:49 PM GMT)

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.615 குறைந்து விற்பனை ஆனது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் மலர்கள் விவசாயிகள் சங்கம் (பூ மார்க்கெட்) உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையம், சிக்கரசம்பாளையம், ராமபையலூர், பண்ணாரி, ராஜன் நகர், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1.100-க்கும், முல்லைப்பூ ரூ.800-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.14-க்கும், பட்டுப்பூ ரூ.41-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,715-க்கும், முல்லைப்பூ ரூ.1,020-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.10-க்கும், பட்டுப்பூ ரூ.41-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.320-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும் ஏலம் போனது. இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.615-ம், காக்கடா ரூ.220-ம், கனகாம்பரம் ரூ.20-ம் குறைந்து விற்பனை ஆனது. ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, கோவை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

Next Story