மாவட்ட செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் வரத்து குறைந்தது சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு + "||" + In Chennai, the price of fish Increase

பருவநிலை மாற்றத்தால் வரத்து குறைந்தது சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

பருவநிலை மாற்றத்தால் வரத்து குறைந்தது சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
பருவநிலை மாற்றத்தால் மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் சென்னையில் மீன்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
சென்னை,

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வீசும் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்குவதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பும் நிலை உள்ளது.


எனவே கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீன்கள் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரி எம்.சி.பி. சதீஷ்குமார் கூறியதாவது:-

மீன்கள் வரத்து குறைவால் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் மீன்கள் விலை 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி வஞ்சரம் (சிறியது) ஒரு கிலோ ரூ.650, வஞ்சரம் (பெரியது) ரூ.700, மத்தி ரூ.100, கவளை ரூ.100, பெரிய சங்கரா ரூ.250, சுறா ரூ.180, வெள்ளை கிழங்கா ரூ.350, ஷீலா ரூ.300, அயிலா ரூ.170, ஏரி வவ்வால் ரூ.100, கட்லா ரூ.120, பாறை ரூ.200, நெத்திலி- ரூ.130 என மீன் வகைகள் விலை உயர்ந்துள்ளது.

ரூ.120-க்கு விற்பனையான நண்டு ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. இறால் வகைக்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மீன்கள் விலை அதிகரித்தாலும் சென்னை திரு.வி.க.நகர், சிந்தாதிரிப்பேட்டை, வானகரம், புழல் காவாங்கரை உள்பட நகரின் முக்கிய மீன் மார்க்கெட்டுகளில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நடத்த முடிவு
சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது என டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2. மதுரை வழியாக இயக்கப்படும்: சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னையில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயிலை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்.
3. சென்னையில் காதலிக்க மறுத்த பெண் ஊழியருக்கு கத்திக்குத்து உடன் வேலை பார்த்த அதிகாரி வெறிச்செயல்
சென்னையில் காதலிக்க மறுத்த பெண் ஊழியரை அவரது சக அதிகாரி கத்தியால் குத்தினார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.
4. சென்னையில் பொதுமக்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் மோசடி 500 பேர் பரபரப்பு புகார்; 7 பேர் கைது
சென்னையில் தனியார் நிதி நிறுவனங்களின் மூலம் கடன் தருவதாக கூறி கோடிக்கணக்கில் சுருட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் பணத்தை இழந்த 500 பேர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பர பரப்பு புகார் கொடுத்துள்ளனர்.
5. சென்னையில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.