சிறுவயதிலேயே குழந்தைகள் சட்டத்தை மதிப்பவர்களாக திகழ்கின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பெருமிதம்


சிறுவயதிலேயே குழந்தைகள் சட்டத்தை மதிப்பவர்களாக திகழ்கின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பெருமிதம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

சிறுவயதிலேயே குழந்தைகள் சட்டத்தை மதிப்பவர்களாக திகழ்கின்றனர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பெருமிதத்துடன் கூறினார்.

ஆம்பூர், 

ஆம்பூர் ஆனைக்கார் குழும அறக்கட்டளை சார்பில் சமூக நலத்திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு குழும தலைவர் ஆனைக்கார் ஷபீக்அஹமத், மூத்த உறுப் பினர் என்.எம்.ஜக்கரியா ஆகி யோர் தலைமை தாங்கினர். விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப் டன் கபில்தேவ் கலந்து கொண் டார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

இளைஞர்களுக்கு பொறுப் புணர்வு இருக்க வேண்டும். அவர்கள் பொறுப்புணர் வுடன் செயல் பட்டு இந்தியா வை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். நல்ல பண்புகளை கொண்ட இளைஞர்களால் நம்நாடு பல மிக்க நாடாக உயரும்.

இந்திய நாடு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடு ஆகும். உலகில் இந்தியா போன்று எந்த நாடும் இல்லை. பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நல்லவர்களுக்கு வாக்களி யுங்கள்.

ஆம்பூரை சேர்ந்த சிறுமி ஹனீபாஷாரா தன்வீட்டில் கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித் துள்ளார் என்பது பெருமைக் குரிய தாகும். இதேபோல் நான் எனது மகளை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சாலை விதியை மீறியதால் போலீசாரால் தடுத்து நிறுத்தப் பட்டேன். பிறகு நான் கிரிக் கெட் வீரர் என்பதை அறிந்து போலீசார் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். ஆனால் எனது மகள் விதியை மீறியதற் கான அபராதத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத் தினாள். நானும் அபராதம் செலுத்தினேன். அந்த அள வுக்கு குழந்தைகள் சிறு வயதி லேயே சட்டத்தை மதிப்பவர் களாக திகழ்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து அறக்கட்டளையின் சார்பில் கழிவறை கட்டக்கோரி தந்தை மீது போலீசில் புகார் அளித்த ஆம்பூர் பள்ளி மாணவி ஹனீபாஷாராவிற்கு ரூ.1 லட்சம் பரிசு, கலாம் செயற்கை கோள் குழுவினர் மற்றும் அதன் இயக்குனர் ஸ்ரீமதி கீசன் குழுவினரை பாராட்டி ரூ.5 லட்சம் பரிசு தொகை, 50 பயனாளிகளுக்கு கழிப்பறை கட்டிய சாவி வழங்கி மற்றும் கிரிக்கெட் அகாடமியை கபில் தேவ் தொடங்கி வைத்தார்.

விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப் டன் கபில்தேவ், தமிழ்நாடு வக்ப் வாரிய முன்னாள் தலை வர் ஏ.ஜெ.அப்துல்ரசாக், சங் கல்ப் ஒபன் பள்ளி இயக்கு னர் லட்சுமி கிருஷ்ணகுமார் ஆகி யோருக்கு வாழ் நாள் சாதனை யாளர் விருதும், இந்திய மகளிர் மோட்டார் சைக்கிள் முதல் சாம்பியன் அலிஷா அப்துல்லா, இந்திய ஆக்கி ஒலிம்பிக் அணி முன்னாள் கேப்டன் ரியாஸ்நபி, குறைந்த எடையிலான கலாம் சாட்டி லைட் என்ற பெயரில் செயற்கை கோள் ஏவியதற்காக விஞ்ஞானி மதிகீசன் மற்றும் அவரது குழுவினரை பா ராட்டி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட பி.ஆர்.ஆகில்அஹமத், மேல் விஷாரம் கே.எச்.குழும தலை வர் முஹமத்காசிம், ஆம்பூர் டி.அப்துல்வாஹித் குழும தலைவர், டி.ரபீக் அஹமத் மற்றும் ஆனைக்கார் குழுமத் தினர், பள்ளி மாணவர் கள், பொதுமக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆனைக்கார் குழும அறக் கட்டளை செயலாளர் முஹம்மது ஆனைக்கார் நன்றி கூறினார்.

Next Story