திருவாரூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்


திருவாரூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி, வேலுடையார் கல்வியியல் கல்லூரி, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கடைவீதி, பஸ் நிலையம் வழியாக பனகல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தை அடைந்தது.

அங்கு வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளையும், வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். பின்னர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் ஏற்றனர். அப்போது அவர் பேசியதாவது:-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பியவர்களும் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்வதுடன் தங்களது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜனநாயக கடமையாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் முருகதாஸ், முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து, தாசில்தார் குணசீலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story