தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் நிறம் மாறியது ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை


தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் நிறம் மாறியது ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2019 3:30 AM IST (Updated: 28 Jan 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறியது. இதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறியது. இதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.

ரெயில் பெட்டிகள்

மத்திய அரசு ரெயில்வே துறையில் பல்வேறு மாறுதல்களை செய்து வருகிறது. அதன்படி அதிவிரைவு ரெயில்களின் பெட்டிகளை புதுப்பித்து புதுப்பொலிவுடன் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் உள்ள ரெயில் பெட்டிகள் மாற்றப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி-சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 23 ரெயில் பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் நேற்று முன்தினம் குடியரசு தினத்தையொட்டி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டன. இதனால் ரெயில் முழுவதும் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மாவட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் திரளாக வந்து ரெயிலை வழியனுப்பி வைத்தனர்.

வெளிர் மஞ்சள் நிறம்

புதுப்பிக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் வெளிப்புறம் வெளிர் மஞ்சள் நிறமாகவும், அதன் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் மெஜந்தா நிறப்பட்டை போடப்பட்டுள்ளது. ரெயிலின் உள்பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கழிவறைகளில் டைல்ஸ் போன்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. பெட்டிகளின் உட்புறத்தில் இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ரெயிலின் தரைப்பகுதி நீல நிறமாக மாற்றப்பட்டுள்ளது. கோச் எண் உள்ளிட்டவைகளை தூரத்தில் இருந்தும் பார்க்கும் வகையில் எல்.இ.டி. டிஸ்பிளே அமைக் கப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த ரெயில் பெட்டிகளில் நேற்று முன்தினம் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

Next Story