தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 2 ஆயிரத்து 626 பேர் விண்ணப்பம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 2 ஆயிரத்து 626 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 2 ஆயிரத்து 626 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
வேலைநிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பல பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்கள் இன்றி மூடப்பட்டு இருந்தன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு அரசு மாற்று நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான அறிக்கையை வெளியிட்டது. அதன்படி கடந்த 2 நாட்களாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வந்தது. இதனால் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து விண்ணப்பங்களை அளித்தனர். நேற்று காலை முதல் விண்ணப்பதாரர்கள் அதிக அளவில் குவிந்தனர். இவர்கள் நேற்று இரவு வரை நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை கொடுத்தனர்.
2,626 பேர் விண்ணப்பம்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் மாலை 6.30 மணி வரை 2 ஆயிரத்து 626 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) பரிசீலிக்கப்பட உள்ளன.
அதே நேரத்தில் இன்று திறக்கப்படாத பள்ளிக்கூடங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு, அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணிகளில் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story