உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை- அசன பண்டிகை விழா ஏராளமானோர் பங்கேற்பு


உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை- அசன பண்டிகை விழா ஏராளமானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Jan 2019 3:15 AM IST (Updated: 28 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உடன்குடி, 

உடன்குடி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தூய மாற்கு ஆலயம்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலயத்தின் பிரதிஷ்டை விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டு 171-வது பிரதிஷ்டை விழா கடந்த 18-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெயபவனியுடன் தொடங்கியது. இரவு 8 மணிக்கு நடுவர் ஜான்சாமுவேல் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.

25-ந்தேதி காலை 7 மணிக்கு திருவிருந்து ஆராதனை, மதியம் 12 மணிக்கு ஐக்கிய விருந்து, மாலை 6.30 மணிக்கு திருச்செந்தூர் சேகரத்தலைவர் தாமஸ் தலைமையில் ஆயத்த ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு 171-வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனையில், ஜெ.ஏ.டி.மனோகர் கலந்துகொண்டு சிறப்பு செய்தி கொடுத்தார். இதில் சபை மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

அசன விருந்து

காலை 6 மணிக்கு அசன பணிகள் தொடங்கியது. தொடர்ந்து குடியரசு தின கொடியேற்றம் நடந்தது. மாலை 5 மணிக்கு அசன விருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை நடந்தது.

நேற்று காலை 9 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு ஐக்கிய விருந்து, மாலை 4 மணிக்கு ஞானஸ்தான ஆராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு கிறிஸ்தியாநகரம் சபை மக்களின் நாடகம் நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை குருவானவர்கள் செல்வன் மகாராஜா, ஜான்சாமுவேல், சபை ஊழியர் மோசஸ், அசன கமிட்டி பரிபாலனர் எஸ்.ஞானராஜ் கோயில் பிள்ளை, தலைவர் பால்ராஜ், செயலாளர் பிரின்ஸ், பொருளாளர் ஜெபஸ்டின் ஆண்ட்ரூஸ் மற்றும் அசன கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Next Story