சேலத்தில் வெள்ளி கொலுசு கடையில் திருட முயற்சி வடமாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு வலைவீச்சு


சேலத்தில் வெள்ளி கொலுசு கடையில் திருட முயற்சி வடமாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வெள்ளி கொலுசு கடையில் புகுந்து திருட முயற்சி நடைபெற்றது. இதுதொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சூரமங்கலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). இவர் சூரமங்கலம் மெயின் ரோட்டில் வெள்ளி கொலுசு கடை நடத்தி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கடையை திறந்து வேலை பார்த்தார்.

மதியம் கடையின் முன்பக்க கண்ணாடி கதவை அடைத்துவிட்டு சாப்பிட சென்றதாக தெரிகிறது.

சிறிது நேரத்துக்கு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கடையில் பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்.

அதில், வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் கடை முன்பு வந்து நிற்பது போலவும், அதில் ஒருவன் கடைக்குள் வந்து டிரையரை நெம்பி வெள்ளி நகைகள், பணம் இருக்கிறதா? என தேடிப்பார்ப்பது போலவும், எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதையும் பதிவாகி இருப்பதை கண்டார்.

இதைப்பார்த்து ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவாங்களை எடுத்து குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story