‘இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள்’ மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேச்சால் சா்ச்சை
‘இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள்’ என்று மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
‘இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள்’ என்று மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பை மாற்றுவதாக...
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி ஆக்ரோஷமாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
அரசியலமைப்பை மாற்றுவதாகவும், நாங்கள் இருப்பதே அதை மாற்றுவதற்காக தான் என்றும் பேசினார். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எழுத்தாளர்களுக்கு தாய்-தந்தை இல்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மண்ணோடு மண்ணாக்குங்கள்
இந்த நிலையில் குடகு மாவட்டம் மாதாபுராவில் நேற்று இந்து அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்கள், குடகில் மறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அத்தகைய தேச துரோகிகளுக்கு இங்கு இடம் தரக்கூடாது. அவர்கள் இ்ங்கு வந்தால், மண்ணோடு மண்ணாக்குங்கள். இந்து பெண்களின் உடலை யாராவது தொட்டால், அவர்களின் கையை வெட்டுங்கள்.
இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார்.
காங்கிரஸ் கண்டனம்
அனந்தகுமார் ெஹக்டேயின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் மதுசூதன் கூறுகையில், “அனந்தகுமார் ஹெக்டே இவ்வாறு பேசியது தவறு. அவரது பேச்சுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. இதை பா.ஜனதா நியாயப்படுத்தாது” என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா எம்.பி. கூறுகையில், “அனந்தகுமார் ஹெக்டே கூறிய கருத்து தவறானது. அவர் தனது மனநிலையை இழந்துவிட்டார் என்பதை இது காட்டுகிறது. அவரை மந்திரிசபையில் இருந்து மோடி நீக்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story