கோவில் பிரசாதம் சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவு: மேல் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு குமாரசாமி உத்தரவு


கோவில் பிரசாதம் சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவு: மேல் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு குமாரசாமி உத்தரவு
x
தினத்தந்தி 28 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

கோவில் பிரசாதம் சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மேல் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.

பெங்களூரு. 

கோவில் பிரசாதம் சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மேல் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.

பக்தர்களுக்கு பிரசாதம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் கஜானனா சர்க்கிளில் பிரசித்தி பெற்ற கங்கம்மா கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 25-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு ஒரு பெண், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அதை 30-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கி சாப்பிட்டனர். அதன் பிறகு அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் பிரசாதம் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் கவிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மற்றவர்கள் கோலாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி, நேற்று சிக்பள்ளாப்பூர் கலெக்டர் அனிருத் ஷரவண்னுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இந்த சம்பவம் குறித்து முழு தகவல்களையும் குமாரசாமி கேட்டு பெற்றார்.

குமாரசாமி உத்தரவு

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு குமாரசாமி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஆலோசித்து இதில் முடிவு எடுக்கும்படியும் முதல்-மந்திரி அறிவுறுத்தினார்.

Next Story