கருங்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
கருங்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
வையம்பட்டி,
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 697 காளைகள் களம் இறக்கப்பட்டன. 434 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், சப்-கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.
முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில், பல காளைகளை அவர்கள் அடக்கி தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்பட பல்வேறு பரிசு பொருட்களை தட்டிச் சென்றனர். வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல, சிறந்த காளை மற்றும் மாடு பிடி வீரருக்கு ½ பவுன் தங்க காசு வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதிலும், கால்களால் மிதித்ததிலும் 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் மேல் சிகிச்சைக்காக 3 பேர் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து தகுதி உள்ள காளைகளை மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர். இதேபோல் வீரர்களையும் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று விளையாடிய போதும், வீரர்கள் காளைகளை அடக்கிய போதும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். வையம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story