ஆஸ்பத்திரியில் பெண் நோயாளி உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த வார்டுபாய் கைது


ஆஸ்பத்திரியில் பெண் நோயாளி உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த வார்டுபாய் கைது
x
தினத்தந்தி 28 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரியில் பெண் நோயாளி உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த வார்டுபாய் கைது செய்யப்பட்டார்.

புனே, 

ஆஸ்பத்திரியில் பெண் நோயாளி உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த வார்டுபாய் கைது செய்யப்பட்டார்.

உடை மாற்றும் அறையில் செல்போன்

புனேயை சேர்ந்த பெண் ஒருவர், சம்பவத்தன்று வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கணவருடன் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க கூறினார். இதையடுத்து அந்த பெண் ஸ்கேன் எடுக்கும் அறைக்கு சென்றார்.

இதற்காக அங்குள்ள தனி அறையில் உடை மாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த அறையில் செல்போன் ஒன்று வீடியோ கேமரா ஆன் செய்த நிலையில் இருந்ததை பார்த்தார்.

வார்டுபாய் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கணவரிடம் இதுபற்றி கூறினார். உடனே அவர் அறைக்குள் சென்று அந்த செல்போனை கைப்பற்றி பார்த்தார். அதில், அவரது மனைவி உடை மாற்றிய காட்சி பதிவாகி கொண்டு இருந்தது.

இதை பார்த்து தம்பதி இருவரும் பதறிப்போயினர். பின்னர் இது குறித்து கோரேகாவ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த ஆஸ்பத்திரியில் வார்டுபாயாக பணிபுரிந்து வரும் லாகேஷ் லாகு உட்டேகர்(வயது35) என்பவர் தான் செல்போனை படம் பிடிக்க அங்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அந்த ஆஸ்பத்திரிக்கு வந்த வேறு பெண்களையும் அவர் படம் பிடித்தாரா? என்பதை கண்டறிய அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story