டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தெப்ப குளத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி நின்ற கார் பள்ளிகொண்டாவில் சம்பவம்
பள்ளிகொண்டாவில் உள்ள உத்திரரங்கநாத சுவாமி கோவிலில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தெப்ப குளத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி கார் நின்ற்து.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள உத்திரரங்கநாத சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று காலை காஞ்சீபுரத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் காரில் பள்ளிகொண்டா உத்திரரங்கநாத கோவிலுக்கு வந்தனர். காரில் இருந்தவர்களை கீழே இறக்கிவிட்டு, கார் டிரைவர் காரை தெப்ப குளத்தின் அருகே நிறுத்த முயன்றார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தரைமட்ட சுற்றுச்சுவர் மீது ஏறியது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் காரை அப்படியே நிறுத்தி விட்டார். இதனால் குளத்துக்குள் விழாமல் தப்பினார். பின்னர் டிரைவரை காரில் இருந்து பொதுமக்கள் மீட்டனர். அதைத் தொடர்ந்து டிராக்டர் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் தெப்பக் குளம் முன்பு அடிக்கடி நடக்கிறது. எனவே, தெப்ப குளத்தின் சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story