நெல்லை அருகே இரட்டை கொலை: போலீசாரால் தேடப்பட்டவர் ஆலங்குளம் கோர்ட்டில் சரண்
நெல்லை அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் ஆலங்குளம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.
ஆலங்குளம்,
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழச்செவல் நயினார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி (வயது 47). விவசாயி. இவருடைய மனைவி செல்வி (40). இவர்களுக்கு அம்மையப்பன் என்ற அய்யப்பன் (22), மகாராஜன் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
செல்லக்குட்டியும், செல்வியும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களை சேர்த்து வைக்க முயற்சிகள் எடுத்தும் பலன் அளிக்கவில்லை. இதற்கு செல்லக்குட்டியின் நண்பர் வேல்சாமி (40) இடையூறாக இருந்ததாக செல்வி குடும்பத்தினர் கருதினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லக்குட்டி, வேல்சாமி ஆகியோர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த இரட்டை கொலை வழக்கில் ஏற்கனவே நெல்லை கோர்ட்டில் செல்லக்குட்டியின் மகன் மகராஜன், உறவினர் மாடக்கண்ணு ஆகியோர் சரண் அடைந்தனர். மேலும், செல்லக்குட்டியின் 17 வயதான மற்றொரு மகன், உறவினர்கள் முத்துரமேஷ் (20), அரிராமன் (48) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் மற்ற கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கீழச்செவல் கீழத்தெருவை சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் (வயது 42) உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாரி நேற்று ஆலங்குளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
அவரை நாளை (புதன் கிழமை) வரை காவலில் வைத்து நெல்லை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு பிச்சை ராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாரியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story