சக்தி திட்டத்தில் இணைந்து காங்கிரஸ் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் வேண்டுகோள்
சக்தி திட்டத்தில் அனைவரும் இணைந்து காங்கிரஸ் கட்சி வெற்றிபெற பாடுபடுங்கள் என்று தொண்டர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய்தத் வேண்டுகோள் விடுத்தார்.
காரைக்கால்,
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சக்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்று சக்தி திட்டம் டணால் தங்கவேல் கலையரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன், புதுச்சேரி மாநில சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் அருள் பெத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சக்தி திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுச்சேரி- தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் தொடங்கி வைத்து பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலம் தொண்டர்கள்தான். அவர்களை இணைக்கும் வகையில் ராகுல்காந்தி இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இதில் அனைவரும் இணைந்தால், அனைத்து தலைவர்களுடனும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.
அண்மையில் நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலின் போது, யார், யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதை ராகுல்காந்தி இந்த சக்தி திட்டத்தின் மூலம் தொண்டர்களிடம் பேசிதான் முடிவு செய்தார். அந்த வகையில் புதுச்சேரியிலேயே அதிக உறுப்பினர்களை இணைத்த பெருமை காரைக்கால் மாவட்டத்தை சேரவேண்டும்.
சக்தி திட்டத்தில் இணைந்தால், ஊர் தலைவர் யார், வரும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் யாரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற முடிவை ராகுல்காந்தி உங்களிடம் கேட்டு முடிவு செய்வார். சக்தி திட்டத்தில் சேர, புதுச்சேரிக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள சக்தி 87470 35000 என்ற பிரத்யேக எண்ணிற்கு, வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை போனில் டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
தொடர்ந்து, சக்தி திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்கள் என்ற பதில் எஸ்.எம்.எஸ் வரும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. தேர்தல் தேதி அறிவித்தபிறகு, இதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மக்களையும் நேரில் சந்தித்து, அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்யவேண்டும். அப்போதுதான் ராகுல்காந்தி பிரதமராக முடியும். எனவே, இப்போதே சக்தி திட்டத்தில் இணைந்து மற்றவர்களையும் இணைக்க பாடுபடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story