ஜலகண்டாபுரத்தில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
ஜலகண்டாபுரத்தில் கோஷ்டி மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜலகண்டாபுரம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 43). கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி (42). 2 பேரும் வேன் டிரைவர்கள். தங்கராஜீக்கும், துரைசாமிக்கும் ஜலகண்டாபுரம் பஸ் நிலைய கழிவறை முன்பு நின்றபோது தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி இரவு 9.30 மணியளவில் பஸ்நிலையம் அருகே இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கூலித்தொழிலாளர்கள் சுரேஷ் (31), ரவி (36), செந்தில்குமார் (25), சுதாகர் (28) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து ஜலகண்டா புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் துரைசாமி, வினோத் (31), அய்யந்துரை (30), சுதாகர், சிவா (20), பிரபாகரன் (32), வாசு (28), அய்யப்பன் (30), மேகநாதன் (35), கோபி (28), நவநீதன் (30), பாலாஜி (21), முருகன் (48), மற்றொரு பாலாஜி (20), நாராயணன் (56) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் செந்தில் (30), மற்றொரு சிவா (27), இன்னொரு செந்தில் (27), ரவி, மற்றொரு அய்யப்பன் (34) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து நாராயணன், முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story