லஞ்ச வழக்கில் கைதான நில அளவையருக்கு 2 ஆண்டு சிறை


லஞ்ச வழக்கில் கைதான நில அளவையருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் கைதான நில அளவையருக்கு திண்டுக்கல் கோர்ட்டில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சின்னக்கலையம்புத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் பட்டா மாறுதல் கேட்டு கடந்த 2008-ம் ஆண்டு மனு செய்தார். அப்போது அவருக்கு பட்டா மாறுதல் வழங்க, ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக நெய்க்காரப்பட்டி நில அளவையர் வெற்றிவேலை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நம்பி நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட வெற்றிவேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

இதேபோல் சிந்தலக்குண்டுவை சேர்ந்த சசிகலா வீடு கட்ட அனுமதி கேட்டு, சீலப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மனு செய்தார். அவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சீலப்பாடி ஊராட்சி உதவியாளர் பாலதண்டபாணியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாலதண்டபாணிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நம்பி உத்தரவிட்டார். 

Next Story