கடலூரில் சாகடலூரில் சாலை மறியல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,460 பேர் கைதுலை மறியல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,460 பேர் கைது


கடலூரில் சாகடலூரில் சாலை மறியல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,460 பேர் கைதுலை மறியல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,460 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2019 4:48 AM IST (Updated: 29 Jan 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் நேற்றும் நீடித்தது. கடலூரில் நேற்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,460 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையில் பணிக்கு செல்லாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் 12 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பணிக்கு செல்லாத ஆசிரியர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பிற்பகலுக்குள் பணிக்கு திரும்பினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கிடையாது என்று கல்வி அதிகாரிகள் கூறி இருந்தனர். ஆனால் நேற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, கோரிக்கைகளை விளக்கி கோஷங்களை எழுப்பினர். இவர்களின் போராட்டத்துக்கு தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்களும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி கோஷமிட்டதோடு, பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையே இவர்களின் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் ஆதரவு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் சேர்ந்து கோஷமிட்டு சென்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,460 பேரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர். இதில் 600 பெண்களும் அடங்குவர். கைதானவர்களை வாகனங்களில் ஏற்றி 6 திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

Next Story