குறிஞ்சிப்பாடியில் கால்வாயில் பச்சிளம் குழந்தை பிணம்


குறிஞ்சிப்பாடியில் கால்வாயில் பச்சிளம் குழந்தை பிணம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:58 AM IST (Updated: 29 Jan 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடியில் கால்வாயில் பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி சின்னகடை பகுதியில் பழைய ஆஸ்பத்திரி வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் பிணமாக கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுபற்றி குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த குழந்தையின் உடலை சாக்கடையில் இருந்து மீட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். இருப்பினும் அது யாருடைய குழந்தை என்று தெரியவில்லை.

இதையடுத்து அந்த பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பச்சிளம் குழந்தையை சாக்கடையில் வீசிச்சென்றது யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தை வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story