ஆசிரியர்கள்– அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர்கள்– அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:15 AM IST (Updated: 29 Jan 2019 8:25 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பை தடைசெய்யும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஞானதாஸ், மாநில துணைச்செயலாளர் இளங்கோ, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன், பொருளாளர் லெட்சுமணன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், துணைத்தலைவர் அந்தோணி, மாநில செயலாளர் ஐடாஹெலன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

Next Story