ஜாக்டோ-ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும் சீர்காழியில், அர்ஜுன் சம்பத் பேட்டி
ஜாக்டோ-ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சீர்காழியில் அர்ஜுன் சம்பத் கூறினார்.
சீர்காழி,
சீர்காழி பகுதியில் கோவில் இடங்களை அரசே ஆக்கிரமிப்பு செய்து ரேஷன் கடைகள், பஸ் நிறுத்தம் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. கோவில் இடங்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் புகழ் பெற்ற வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், சீர்காழி சட்டைநாதர் கோவில் ஆகிய கோவில்கள் தருமபுரம் ஆதீனத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த கோவில்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். புகழ் பெற்ற இந்த கோவில்களுக்கு நீண்டகாலமாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ளது. எனவே தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் மேற்கண்ட கோவில்களின் கும்பாபிஷேகத்தை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பு எதிர்கட்சி தூண்டுதலின் பேரிலும், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் பேரிலும் செயல்படுகிறது. இந்த அமைப்பு மத்திய, மாநில அரசுகளை சீர்குலைப்பதோடு, அரசின் திட்டங்கள் மக்களுக்கு சேரக்கூடாது என்ற நோக்கத்தோடு ஒருசில அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தூண்டி விடுகின்றனர். எனவே ஜாக்டோ-ஜியோ அமைப்பை மத்திய-மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூண்டி விடுகிறார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வருகிற 3-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் திருக்குறள் மாநாட்டை இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ளோம். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் இந்து மக்கள் கட்சி சார்பில் வழங்கப்படும். மாவட்டந்தோறும் திருக்குறள் பேரவை மாநாடு நடத்தப்படும்.
லயோலா கல்வி நிர்வாகத்தை அரசுஉடமையாக்க வேண்டும். பாரத மாதாவை இழிவாக சித்திரம் வரைந்த முகிலனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட ஏழை- எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நவோதயா பள்ளி மாவட்டந்தோறும் திறக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கோவில்களின் அருகே இந்து மதத்திற்கு எதிராக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடக்கிறது. இதில் சிவனடியார்கள், மடாதிபதிகள், வைணவ அமைப்புகள், ஓம் சக்தி அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில செயலாளர் சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, புதுச்சேரி மாநில தலைவர் மஞ்சினி, மாவட்ட துணை தலைவர் குன்னம் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story