வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பஸ் சிறைபிடிப்பு - பொதுமக்கள் போராட்டம்


வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பஸ் சிறைபிடிப்பு - பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே பொதுமக்கள் குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி, 

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வாணியம்பாடி - திம்மாம்பேட்டை ரோட்டில் உள்ள மதனாஞ்சேரி கிராம பஸ் நிறுத்தத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார், வருவாய்துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story