அரசு வக்கீலின் மகளை காதலித்து, எதிர்ப்பை மீறி திருமணம்: வாலிபரின் பெற்றோரை துன்புறுத்திய போலீசார் பாதுகாப்பு கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
மண்டியாவில் அரசு வக்கீல் ஒருவரின் மகளை காதலித்து எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட வாலிபரின் பெற்றோரை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தி உள்ளனர். அதனால் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
ஹலகூர்,
மண்டியா டவுன் ஹாலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா கவுடா. இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதியின் மகன் நிரஞ்சன் கவுடா(வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மண்டியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். அந்த பெண்ணின் தந்தை அரசு வக்கீல் ஆவார்.
அந்த மாணவியும், நிரஞ்சனும் கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு இருவருடைய பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அந்த இளம்பெண்ணின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும் நிரஞ்சனும், அந்த பெண்ணும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்தனர். மேலும் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 21-ந் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் இருவரும் தலை மறைவாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தங்களுடைய மகளை காணவில்லை என்றும், அவளை நிரஞ்சன் கவுடா கடத்திச் சென்று விட்டதாகவும் கூறி அந்த பெண்ணின் பெற்றோர் மண்டியா கிழக்கு போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் நிரஞ்சன் கவுடாவின் தந்தை கிருஷ்ணா கவுடா, தாய் வசந்தா ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த சந்தர்ப்பத்தில் அவர்களை போலீசார் அவமானப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் 2 பேரும் கடந்த ஒருவார காலமாக தங்களுடைய வீட்டிற்கு செல்லாமல் உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் அவர்கள் மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரகாஷ் தேவராஜுவை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் தங்களுடைய மகன் நிரஞ்சன் கவுடா, அரசு வக்கீல் ஒருவரின் மகளை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும், இதுதொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று அவமானப்படுத்தி துன்புறுத்துவதாகவும், அதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரகாஷ் தேவராஜு இதுபற்றி விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிருஷ்ணா கவுடாவும், அவருடைய மனைவி வசந்தாவும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story