வானவில் : திருடியவரை காட்டிக் கொடுக்கும் ஸ்மார்ட் பர்ஸ்


வானவில் : திருடியவரை காட்டிக் கொடுக்கும் ஸ்மார்ட் பர்ஸ்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:25 PM IST (Updated: 30 Jan 2019 4:25 PM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் யுகத்தின் புதிய வரவாக களமிறங்கி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ஸ்மார்ட் வாலட்.

விருது பெற்ற டிசைனர்களால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த வோல்டர்மேன் எனப்படும் இந்த பர்ஸ். பணம், கார்டுகள் வைப்பது மட்டுமின்றி இதனுள் ஒரு பவர் பேங்க் உள்ளது. திடீரென்று செல்போனில் சார்ஜ் போய்விட்டால் இதில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் இருக்கும் முக்கியமான மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், யாராவது இதை திருட முற்பட்டால், அலாரம் அடித்து காட்டிக் கொடுத்துவிடும். நமது ஸ்மார்ட் போனை யாராவது அபேஸ் செய்ய நினைத்தாலும் இதே போன்று அலாரம் அடிக்கும்.

அது மட்டுமின்றி திருடு போன வாலட் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உள்ளே இருக்கும் ஜி.பி.எஸ். ட்ராக்கர் நமது போனுக்கு தகவல் அனுப்பிவிடும்.

எல்லாவற்றையும் விட ‘ஹை லைட்’ என்னவெனில், உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மினி கேமராவில் திருடியவரை புகைப்படம் எடுத்து நமது போனுக்கு அனுப்பும். பர்ஸும் போனும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும். பிரித்து வேறு இடத்திற்கு எடுத்து செல்ல நினைத்தால் உரிமையாளருக்கு மெசேஜ் அனுப்பிவிடும்.

மேலும் எங்கு சென்றாலும் இணையத் தொடர்பில் இருக்க உதவி செய்யும் வை-பை வசதியும் இதில் உண்டு. இத்தனை வசதிகள் இருந்த போதிலும் மிகவும் லைட் வெயிட்டாக இருக்கிறது இந்த அதிரடி வாலட்.

Next Story