வானவில் : வெளியே வாட்ச் உள்ளே டூல் பாக்ஸ்


வானவில் : வெளியே வாட்ச் உள்ளே டூல் பாக்ஸ்
x
தினத்தந்தி 30 Jan 2019 5:21 PM IST (Updated: 30 Jan 2019 5:21 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக கைக்கடிகாரம் என்பது நேரம் மட்டுமே பார்க்க உதவும். அதை தவிர சில மாடல்களில் நேரம் மற்றும் நாள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

 ஆனால் கைக்கடிகாரத்தில் பல முக்கியமான உபகரணங்கள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது ரேகான் 6 எனப்படும் வாட்ச்.

இது ஸ்மார்ட் வாட்ச் வகையை சேர்ந்தது. 44 மி.மீ அளவுள்ள டயலை கழற்றினால் உட்புறம் ஒரு முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி இருக்கிறது. கேன் மற்றும் பாட்டில் திறப்பான், வெட்டு கத்தி, ஒரு பூதக்கண்ணாடி மற்றும் விசில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கைக்கடிகாரத்தில் இவ்வளவு விஷயங்களா என்று வியக்க வைக்கிறது.

இது மட்டுமின்றி பிளாஷ் லைட் மற்றும் லைட்டர் ஆகியவையும் உள்ளடக்கி இருக்கிறது இந்த ரேகான் வாட்ச். பயணங்களின் போது ஒரு டூல் பாக்ஸ் போல செயல்பட்டு பல வகையிலும் உதவும் இந்த அருமையான கைக்கடிகாரம்.

Next Story