மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் மாணவர் பிணம் போலீஸ் விசாரணை + "||" + Stripped head on the rails Student's death police investigation

தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் மாணவர் பிணம் போலீஸ் விசாரணை

தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் மாணவர் பிணம் போலீஸ் விசாரணை
தக்கலை அருகே தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் மாணவர் பிணமாக கிடந்தார்.
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே மாவிளை பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.


பின்னர் நாகர்கோவில் ரெயில்வே போலீசாரும் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர், திங்கள்நகர் அருகே தலக்குளம் பட்டறைவிளை பகுதியை சேர்ந்த மரிய மிக்கேல் மகன் சகாயராஜா (வயது 19) என்பது தெரியவந்தது. சகாயராஜாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதனால், வறுமை காரணமாக தக்கலை அருகே புதூர் மாங்கோடு பகுதியில் உள்ள தனது உறவினரான மரிய டென்னிஸ் என்பவர் வீட்டில் வசித்து வந்தார். மேலும், திக்கணங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

சகாயராஜா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? இல்லை தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் பலி
கரூர் அருகே கோவில் திருவிழாவிற்கு தீர்த்தக்குடம் எடுக்க வந்த ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
2. கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த முதியவர் பிணம்
கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே முதியவர் பிணம் கிடந்தது. போலீசார் இடையே எழுந்த எல்லை பிரச்சினையால் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
3. நாகர்கோவில் அருகே தூக்கில் இளம்பெண் பிணம் உதவி கலெக்டர் விசாரணை
நாகர்கோவில் அருகே தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கினார். அவர் சாவு குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.
4. வாலிபர் அடித்துக் கொலை உடலை குளத்தில் வீசிய நண்பர்களை போலீஸ் தேடுகிறது
இரணியல் அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை குளத்தில் வீசிய நண்பர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
5. திருச்சிற்றம்பலம் அருகே அரசு பஸ் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பலி மற்றொருவர் படுகாயம்
திருச்சிற்றம்பலம் அருகே அரசு பஸ் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக இறந்தார். மேலும் மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.