வானவில்: எடையுடன் பல விவரங்களை காட்டும் ‘யூன்மாய்’
உடலைக் கச்சிதமாக வைத்துக் கொள்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் நமது எடையை கண்காணிப்பது அவசியம். இந்த தேவைக்கென எடை பார்க்கும் கருவிகளும் உள்ளன.
‘யூன்மாய்’ என்ற இந்த எடை பார்க்கும் கருவியை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உடலில் எவ்வளவு கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது, தசைகளின் அளவு என்ன, தண்ணீர் அளவு எவ்வளவு இருக்கிறது, நமது உடல் நிறை குறியீட்டெண் ( BMI ) என்ன, என்று அக்குவேறு ஆணி வேறாக நமது உடலைப் பற்றிய அனைத்து தகவல்களையும் புட்டு புட்டு வைத்து விடும். இதில் இருக்கும் உயிர் மின் மறுப்பு சென்சார்கள் (BIO IMPEDENCE SENSORS ) ஒவ்வொரு முறை நாம் இதில் ஏறி நிற்கும் போதும் துல்லியமான தகவல்களைத் தருகின்றன.
இந்த யூன்மாய் இயந்திரத்தை உபயோகிப்பது மிகவும் சுலபம். இதன் செயலியை நம்முடைய ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்த பின்னர், நம்முடைய பெயர், வயது, உயரம், பாலினம் போன்ற தகவல்களை பதிந்து வைத்து விட வேண்டும். புளூ டூத் மட்டும் ஆன் செய்திருந்தால் போதும். இரண்டே நிமிடங்களில் நமது போனின் திரையிலும், இந்த கருவியின் திரையிலும் ஒரே நேரத்தில் நமது எடை மற்றும் மற்ற விவரங்களை காட்டும். பத்து விதமான நோய்கள் குறித்தும் அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே எச்சரிக்கையும் செய்து விடும்.
பதினாறு நபர்கள் இந்த கருவியை ஒரே நேரத்தில் தங்கள் போனுடன் இணைத்துக் கொள்ளலாம். அவரவருக்கென்று தனித்தனியாக தகவல்களை பாதுகாக்கும். வழுவழுப்பான கண்ணாடி பரப்பில் எல்.இ.டி டிஸ்பிளே இருப்பதால் பார்ப்பதற்கும் இது அழகாக இருக்கிறது. இதன் விலை 72 அமெரிக்க டாலர் ஆகும்.
Related Tags :
Next Story