வானவில்: மூலக்கூறுகளை ஆராய்ந்து சொல்லும் கேமரா


வானவில்:  மூலக்கூறுகளை ஆராய்ந்து சொல்லும் கேமரா
x
தினத்தந்தி 30 Jan 2019 8:58 PM IST (Updated: 30 Jan 2019 8:58 PM IST)
t-max-icont-min-icon

ஒரு கேமராவில் அதிகபட்சம் என்ன செய்யலாம்? மிகச் சிறப்பான புகைப்படங்களை எடுக்கலாம். அதையும் தாண்டி யோசித்து ‘ஸ்பேசிம்’ ( SPECIM IQ ) என்கிற கேமராவை கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த கேமரா புகைப்படங்களை எடுக்க பயன்படுவதோடு மட்டுமின்றி எந்த ஒரு பொருளின் தோற்றத்தையும் ஆராய்ந்து அதனுள் இருக்கும் ரசாயன மூலக் கூறுகளையும் கண்டு பிடித்து சொல்லி விடும்.

ஒரு நுண்ணோக்கியை ( MICROSCOPE ) விட நுட்பமாக செயல்படும் இந்த கேமராவை பல துறைகளில் பயன்படுத்த முடியும். விவசாயத்தில் பயிர்களின் வளர்ச்சியை கவனித்து நோய்த் தொற்றுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க முடியும். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டிருப்பின் அதையும் காட்டிவிடும். முக்கியமாக புலனாய்வுத் துறைக்கு மிகவும் பயன்படும்.மிகச் சிறிய தடயத்தை கூட இதன் சக்தி வாய்ந்த லென்ஸ் ஆராய்ந்து திரையில் காட்டி விடும். பழைய ஓவியங்களில் என்ன விதமான ரசாயன நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன போன்ற தகவலையும் இதனைக் கொண்டு அறியலாம்.

மருத்துவத் துறையில் நோய் கிருமிகளை கண்டறிவது என்று இதன் பயன்பாடுகள் நீண்டு கொண்டே போகின்றது.இப்படி அனைத்தையும் துல்லியமாக கண்டறியும் இந்த கேமரா உயர் நிறமாலை ( HYPERSPECTRAL ) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. உலகிலேயே முதன்முதலாக இந்த முறையில் செயல்படக்கூடிய கேமரா என்ற பெருமையை ஸ்பேசிம் பெற்றுள்ளது.

Next Story