தேசிய கட்சிகளுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது ஆரணியில் தங்கதமிழ்செல்வன் பேட்டி
தேசிய கட்சிகளுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன் னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், முன் னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் 4-வது இடத்திற்குதான் செல்லும். மேலும் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறுவார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது. துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு எதிராக வந்தால் நீதிமன்ற தீர்ப்பு நிலைத்து நிற்கும். பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழக கட்சிகளோடு கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகிறார். ஆனால் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இறப்புக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை டி.டி.வி. தின கரன் நிரப்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் தர்மலிங்கம், ம.கி.வரதராஜன், மாநில அமைப்பு செயலாளர் போளூர் சி.ஏழுமலை உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.
Related Tags :
Next Story