72-வது நினைவுதினம்: காந்தி உருவப்படத்துக்கு கவர்னர், முதல்-அமைச்சர் அஞ்சலி


72-வது நினைவுதினம்: காந்தி உருவப்படத்துக்கு கவர்னர், முதல்-அமைச்சர் அஞ்சலி
x
தினத்தந்தி 31 Jan 2019 4:30 AM IST (Updated: 31 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

காந்தியின் 72-வது நினைவுதினத்தையொட்டி மெரினாவில் அவருடைய உருவப்படத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார் கள்.

சென்னை,

மகாத்மா காந்தியின் 72-வது நினைவுதினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் கீழ் அவருடைய உருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு சார்பில் காந்தியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மெரினா காந்தி சிலை அருகில் சென்னை சர்வோதயா சங்கத்தினர் நடத்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், கூடுதல் இயக்குனர் உல. ரவீந்திரன் உள்பட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story