உலகைச் சுற்றி
* சீனாவின் ஜிலின் மாகாணத்தில் சாங்சவுன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டதில் 8 பேர் உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
* வெனிசூலாவின் இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்துள்ளது. அத்துடன் அவர் மீதான விசாரணை முடிவடையும் வரையில் அவரது வங்கி கணக்கு உள்பட அனைத்து சொத்துகளையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* ஜெர்மனியின் ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டின் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஈராக் நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
* இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை கத்தியால் குத்த முயன்றார். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பெண்ணை சுட்டுக்கொன்றனர்.
* ஸ்பெயின் நாட்டின் மன்னர் ஆறாம் பிலிப் திடீர் பயணமாக ஈராக் சென்றார். அங்கு அவர் அந்நாட்டின் அதிபர் பர்ஹாம் சாலியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
* சீனா மற்றும் ரஷியா தங்களின் அணு ஆயுத திட்டங்களில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story