அமைச்சர் கந்தசாமி பிறந்தநாள்: அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விக்னேஷ் வழங்குகிறார்


அமைச்சர் கந்தசாமி பிறந்தநாள்: அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விக்னேஷ் வழங்குகிறார்
x
தினத்தந்தி 31 Jan 2019 3:45 AM IST (Updated: 31 Jan 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கந்தசாமி பிறந்த நாளையொட்டி இன்று (வியாழக்கிழமை) ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிராம் தங்க மோதிரங்களை இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் வழங்குகிறார்.

பாகூர்,

அமைச்சர் கந்தசாமி இன்று (வியாழக்கிழமை) தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதையொட்டி இன்று காலை அவரது தாயார் ராசாம்மாளிடம் ஆசி பெறுகிறார். பின்னர் அவரது சொந்த ஊரான கிருமாம்பாக்கத்துக்கு சென்று அங்குள்ள கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில்அமைச்சர் கந்தசாமி, குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் முதலியார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு திரும்பும் அமைச்சர் அங்கு நடக்கும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் வாழ்த்து பெறுகிறார்.

அமைச்சரின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரஸ் நிர்வாகி பாலமுரளி தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஏம்பலம் தொகுதி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார். அதேபோல் ஏம்பலம் தொகுதியில் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள கோவில்களில் அமைச்சர் கந்தசாமி பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

அமைச்சரின் பிறந்த நாளையொட்டி இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விக்னேஷ் கந்தசாமி தலைமையில் அரசு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் இன்று (வியாழக்கிழமை) பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஏம்பலம் தொகுதியில் கபடி போட்டி, கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகள், மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் செய்துள்ளனர்.

Next Story