ரேஷன் அட்டைகள் மீது சிவக்குமார சுவாமியின் படம் மந்திரி ஜமீர்அகமதுகான் பேட்டி
ரேஷன் அட்டைகள் மீது சிவக்குமார சுவாமியின் படம் அச்சிடப்படும் என்று மந்திரி ஜமீர்அகமதுகான் கூறினார்.
பெங்களூரு,
உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி ஜமீர் அகமதுகான், நேற்று துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்றார். அங்கு மடாதிபதி சித்தலிங்க சுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 1.30 கோடி வறுமைக் கோட்டுக்கு கீழ் (பி.பி.எல்) உள்ளோருக்கான ரேஷன் அட்டை உள்ளது. இந்த ரேஷன் அட்டையில் சிவக்குமார சுவாமியின் படத்தை அச்சிட முடிவு செய்துள்ளோம்.
கவுரவம் அளிக்க வேண்டும்
இனி புதிதாக விநியோகம் செய்யப்படும் ரேஷன் அட்டைகள் மீது அவரது படம் அச்சிடுவதா? அல்லது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பி.பி.எல். ரேஷன் அட்டைகள் மீதும் அவரது படத்தை அச்சிடுவதா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஏழைகளுக்கு சேவையாற்றிய சிவக்குமார சுவாமிக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. 31-ந் தேதி (அதாவது இன்று) டெல்லி செல்கிறேன். அதனால் சிவக்குமார சுவாமியின் 11-ம் நாள் சடங்கு நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை.
இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார்.
Related Tags :
Next Story