பிவண்டியில் மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசிய குற்றவாளியால் பரபரப்பு
பிவண்டியில் மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசிய குற்றவாளியால் பரபரப்பு உண்டானது.
தானே,
தானே மாவட்டம் பிவண்டியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் அஸ்ரப் அன்சாரி(வயது22) என்ற வாலிபரை சாந்தி நகர் போலீசார் கைது செய்து இருந்தனர். அவர் மீதான இந்த வழக்கு விசாரணை பிவண்டி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஜே.எஸ்.பதான் முன்னிலையில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார்.
அப்போது இந்த வழக்கில் அஸ்ரப் அன்சாரியை மாஜிஸ்திரேட்டு ஜே.எஸ்.பதான் குற்றவாளி என தீர்ப்பு கூறினார்.
மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீச்சு
இதை கேட்டதும் குற்றவாளி கடும் ஆத்திரம் அடைந்தார். உடனே காலில் அணிந்து இருந்த செருப்பை கழற்றி மாஜிஸ்திரேட்டை நோக்கி வீசினார். இதை கவனித்ததும் சுதாரித்து கொண்டு மாஜிஸ்திரேட்டு தலையை குனிந்து கொண்டார்.
இதனால் செருப்பு அவர் மீது விழாமல் பறந்து சென்று கீழே விழுந்தது. இந்த சம்பவத்தைப் பார்த்து கோர்ட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அஸ்ரப் அன்சாரியை சுற்றி வளைத்து பிடித்து அவரை வெளியே இழுத்து சென்றனர். பின்னர் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மாஜிஸ்திரேட்டு மீது செருப்பை வீசியது தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீது குற்றவாளி செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story