தொட்டியில் போடாமல் வெளியே கொட்டுவதால் சாலையை ஆக்கிரமிக்கும் குப்பைகள் நோய் பரவும் அபாயம்
சென்னையில் குப்பை தொட்டியில் குப்பைகளை போடாமல் சாலையில் கொட்டுவதால் சாலை முழுவதையும் குப்பைகள் ஆக்கிரமித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்ற மண்டலங்களிலும் தனியார்மயத்தை புகுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் விரக்தியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் சிலர் முறையாக தூய்மை பணியை மேற்கொள்வது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினந்தோறும் வீடுகளுக்கு வந்து குப்பை சேகரித்த பணியாளர்கள், தற்போது வாரத்துக்கு ஒரு நாள் அல்லது 2 நாட்கள் மட்டுமே வருவதால் குடியிருப்புவாசிகள் வீட்டில் தேங்கும் குப்பைகளை சாலையோரம், தெருக்கள் ஓரமாகவும் வீசி செல்லும் நிலை உள்ளது.
அதில் தங்களுக்கு ஏதேனும் இரை இருக்கிறதா? என்று ஆடு, மாடு போன்ற கால்நடைகளும், பூனை, தெருநாய்கள், காகங்கள் போன்றவை குப்பையை கிளறிவிட்டு செல்கின்றன. இதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகள், தெருமுனைகள் குப்பைக் கூளம் போன்று காட்சி அளிக்கிறது. குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத்தெருவில் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன.
சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகளையும் உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கையை துப்புரவு பணியாளர்கள் மேற்கொள்வது இல்லை என்ற புகாரும் இருக்கிறது. இதனால் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகின்றன. இதன் மூலம் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.
சாலையை ஆக்கிரமித்துள்ள குப்பைகளால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே தூய்மை மற்றும் துப்புரவு பணியில் மாநகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாநகராட்சி சார்பில் தெருமுனைகள், முக்கிய சந்திப்புகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சிலர் குப்பைகளை தொட்டியில் போடாமல் சாலைகளிலேயே கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குப்பைக்கழிவுகளை உண்பதால் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே துப்புரவு பணியாளர்கள் மீது மட்டும் குற்றம் சொல்லாமல் பொதுமக்களும் தங்களுடைய தெருக்களை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

Related Tags :
Next Story